/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பெண் கையை பிடித்த வாலிபருக்கு தர்ம அடி
/
பெண் கையை பிடித்த வாலிபருக்கு தர்ம அடி
ADDED : செப் 03, 2024 04:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராசிபுரம்: ராசிபுரம், பாச்சிசெட்டி தெருவை சேர்ந்தவர் பாலாஜி, 38. இவர் தன் டூவீலரில், ராசிபுரத்தில் இருந்து ஆத்துார் செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது, சேந்தமங்கலம் பிரிவு சாலையில் சென்ற இளம் பெண்ணின் கையை, பாலாஜி பிடித்து இழுத்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த அப்பகுதி வாலிபர்கள் சிலர், பாலாஜியை துரத்திப்பிடித்து நிறுத்தினர்.
பாலாஜி போதையில் இருந்தது தெரியவந்தது. இதனால், பாலாஜி பேசியதை பொருட்படுத்தாமல் பொதுமக்கள் அவரை தாக்கினர். அவ்வழியாக வந்தவர்கள் வாலிபர்களை சமாதானப்-படுத்தி அனுப்பி வைத்தனர். இதனால், ஆத்துார் பிரதான சாலையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.