/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
முகாமில் தங்கிய பெண்ணிடம் முதல்வர் போனில் விசாரிப்பு
/
முகாமில் தங்கிய பெண்ணிடம் முதல்வர் போனில் விசாரிப்பு
முகாமில் தங்கிய பெண்ணிடம் முதல்வர் போனில் விசாரிப்பு
முகாமில் தங்கிய பெண்ணிடம் முதல்வர் போனில் விசாரிப்பு
ADDED : ஆக 03, 2024 01:36 AM
பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையம் பகுதி காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு, நான்கு முகாமில், கடந்த, 4 நாட்களாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். நேற்று இரவு, 8:00 மணியளவில் முதல்வர் ஸ்டாலின், மொபைல் போனில் கலெக்டரை தொடர்பு கொண்டு, சந்தைப்பேட்டை முகாமில் உள்ள, 3 பெண்களிடம் வீடியோ காலில் பேசினார்.
அப்போது, பாதுகாப்பு நடவடிக்கை, முகாமில் செய்து தரப்பட்டுள்ள வசதி, உணவு வழங்குவது குறித்து கேட்டறிந்தார். அதற்கு மக்கள், 'எங்களுக்கு பாதுகாப்பான மாற்று இடம் வழங்க வேண்டும்' என, பெண்கள் கோரிக்கை வைத்தனர். 'விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்' என, முதல்வர் தெரிவித்தார்.