/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மாவட்டத்தில் 88.60 மி.மீ., மழை பதிவு
/
மாவட்டத்தில் 88.60 மி.மீ., மழை பதிவு
ADDED : மே 26, 2024 07:31 AM
நாமக்கல் : மாவட்டத்தில், நேற்று முன்தினம், நாமக்கல், ப.வேலுார், புதுச்சத்திரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், 88.60 மி.மீ., மழை பெய்துள்ளது.
தமிழகம் முழுதும், சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அதன்படி, நாமக்கல் மாவட்டத்திலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக, நாமக்கல், ராசிபுரம், புதுச்சத்திரம், மோகனுார், எருமப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் மழை பெய்துள்ளது. நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், தொடர் மழை காரணமாக, கத்திரி வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதனால், பொதுமக்கள், விவசாயிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.
மழை காரணமாக, ஆங்காங்கே உள்ள குளம், குட்டை, ஏரிகள் ஓரளவுக்கு தண்ணீர் தேங்கி, நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதற்கிடையில், நேற்று முன்தினம், நாமக்கல், ப.வேலுார், புதுச்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.
மாவட்டம் முழுதும், நேற்று காலை, 6:00 மணி வரை பெய்த மழையளவு (மி.மீ.,ரில்) பின்வருமாறு: மங்களபுரம், 6, மோகனுார், 4, நாமக்கல், 11, ப.வேலுார், 28, புதுச்சத்திரம், 14, ராசிபுரம், 10, சேந்தமங்கலம், 10, கொல்லிமலை, 5 என, மொத்தம், 88.60 மி.மீ., மழை பெய்துள்ளது.