/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஆபத்தான நிலையில் சிறுமி மருத்துவ செலவிற்கு தவிப்பு
/
ஆபத்தான நிலையில் சிறுமி மருத்துவ செலவிற்கு தவிப்பு
ஆபத்தான நிலையில் சிறுமி மருத்துவ செலவிற்கு தவிப்பு
ஆபத்தான நிலையில் சிறுமி மருத்துவ செலவிற்கு தவிப்பு
ADDED : ஆக 08, 2024 12:21 AM
நாமக்கல்:நாமக்கல் மாவட்டம், எலச்சிப்பாளையம், சத்திநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் பிரபு. இவருக்கு, இரண்டு மகள்கள் உள்ளனர். அதில், மூத்த மகள் தஷ்மிதா, 11, அங்குள்ள பஞ்., நடுநிலைப்பள்ளியில், ஆறாம் வகுப்பு படித்து வருகிறார்.
கடந்த, 27ல், பள்ளி விடுமுறை நாளில், நண்பர்களுடன் விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த செந்தில்குமார், 42, என்பவர், சிறுமி தஷ்மிதாவை கத்தியால் வெட்டினார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சிறுமியை மீட்டு, சேலம் தனியார் மருத்துவமனையில், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ஏழ்மை நிலையில் உள்ள பிரபு, தினமும் கூலி வேலைக்கு சென்று குடும்பத்தை காப்பாற்றி வருகிறார். குழந்தையின் மருத்துவ செலவிற்கு பணம் இன்றி கடும் சிரமத்தில் தவித்து வருகிறார்.
இதனால், பிரபு 'தன் மகளின் மருத்துவ செலவிற்கு உதவிக்கரம் நீட்ட வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், தனக்கு உதவ, 63797-39640, 80723-77989 என்ற மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம்' என, கண்ணீர் மல்க கேட்டுக்கொண்டார்.