ADDED : மே 04, 2024 07:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாமகிரிப்பேட்டை :கடந்த, 30 ஆண்டுகளாக குடியிருந்து வரும் நிலத்திற்கு பட்டா கேட்டு பொதுமக்கள் மனு அளித்துள்ளனர்.
நாமகிரிப்பேட்டை யூனியன், மூலக்குறிச்சி கிராமத்தில், 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதில், பெரும்பாலானோர் மலைவாழ் மக்கள். இவர்கள், 20 ஆண்டுகளாக குடியிருக்கும் தரிசு நிலத்திற்கு இதுவரை பட்டா வழங்கவில்லை. இதனால், இங்கு குடியிருக்கும் மக்கள் எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர். அரசு அறிவிக்கும் எந்த திட்டமும், இவர்களுக்கு கிடைப்பதில்லை. இதுகுறித்து, பா.ஜ.,வின் மத்திய அரசு நலத்திட்டத்துறை மாநில துணைத்தலைவர் லோகேந்திரன், தமிழக முதல்வர், தலைமை செயலர், நில அளவை ஆணையர் ஆகியோருக்கு மனு அளித்துள்ளார். இதில், ஏற்கனவே வழங்கப்பட்ட மனு நிலை, எண் குறிப்பிட்டுள்ளார்.