/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
செடிகளில் அதிகம் காய் பிடிக்க யோசனை
/
செடிகளில் அதிகம் காய் பிடிக்க யோசனை
ADDED : மே 05, 2024 01:54 AM
நாமகிரிப்பேட்டை: காய்கறி செடிகளில் அதிகம் காய் பிடிக்க, 'தேமோர்' கரைசலை பயன்படுத்த, நாமகரிப்பேட்டை வேளாண்துறை யோசனை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, வெளியிட்ட செய்திக்குறிப்பு:
'தேமோர்' கரைசலில் உள்ள, 'சைட்டோகைனின்' என்ற வளர்ச்சி ஊக்கி செடிகளின் வளர்ச்சிக்கும் பூக்கள் அதிகம் பூக்கவும் காய்கறிகள் அதிகம் காய்ப்பதற்கும் உதவுகிறது. 'தேமோர்' கரைசலில் உள்ள, 'ஜிப்ரலிக் ஆசிட்' பூக்கள் உதிராமல், பிஞ்சுகள் கருகாமல் பாதுகாத்து, காய்கள் பெரிதாகவும் அதிக சுவையுடையதாகவும் காய்ப்பதற்கு உதவுகிறது. மேலும், செடி, கொடிகளில் ஏற்படும் வைரஸ் நோயை கட்டுப்படுத்தி, செடிகள் ஆரோக்கியமாக வளர உதவி செய்கிறது. 'தேமோர்' கரைசலில் உள்ள அமிலத்தன்மை பூச்சி விரட்டியாக செயல்படுவதுடன் இலை சுருட்டு நோயையும் கட்டுப்படுத்தும்.
'தேமோர்' கரைசலை எளிதாக தயாரிக்க முடியும். தேங்காய் பால் மற்றும் மோர் சம அளவில் எடுத்துக்கொண்டு, பானையில் ஒரு வார காலத்திற்கு மரத்தின் கீழ் மண்ணில் அல்லது எருக்குவியலுக்குள் ஏழு நாட்கள் புதைத்து வைக்க வேண்டும். ஒரு வாரத்தில் கரைசல் நொதித்து, 'தேமோர்' கரைசல் தயாராகிவிடும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.