ADDED : ஆக 08, 2024 01:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மோகனுார், மோகனுாரில், சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை செயல்பட்டு வருகிறது. இதில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், ஆலை வளாகத்தின் இருந்த சில பொருட்கள், கடந்த சில நாட்களாக தொடர்ந்து காணாமல் போனதாக புகார் எழுந்தது. இதுகுறித்து, சர்க்கரை ஆலை நிர்வாகத்தினர், மோகனுார் போலீசில் புகாரளித்தனர். புகார்படி, போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், ஆலை மெக்கானிக்கல் பிரிவில் பணியாற்றி வரும், மணப்பள்ளி பஞ்., சென்னாக்கல்புதுாரை சேர்ந்த செல்வம், 53, என்பவர் பொருட்களை திருடி சென்றது தெரியவந்தது.
அதைதொடர்ந்து, அவரை பிடித்து விசாரணை செய்ததில், பொருட்களை திருடி சென்றதை ஒப்புக்கொண்டார். அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து, 4.5 கிலோ பித்தளை பொருட்களை மீட்டனர்.