/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தி.கோட்டில் சிறுமி உயிரிழப்பு நிதியை வாங்க மறுத்த பெற்றோர்
/
தி.கோட்டில் சிறுமி உயிரிழப்பு நிதியை வாங்க மறுத்த பெற்றோர்
தி.கோட்டில் சிறுமி உயிரிழப்பு நிதியை வாங்க மறுத்த பெற்றோர்
தி.கோட்டில் சிறுமி உயிரிழப்பு நிதியை வாங்க மறுத்த பெற்றோர்
ADDED : ஆக 24, 2024 01:17 AM
ராசிபுரம், திருச்செங்கோட்டில், கத்தியால் குத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சிறுமி, நேற்று முன்தினம் உயிரிழந்தார்.
அவரது குடும்பத்திற்கு அரசு வழங்கிய நிதி, மூன்று லட்சம் ரூபாயை வாங்க மறுத்த பெற்றோர், நீதி வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
திருச்செங்கோடு அடுத்த சத்திநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் செந்தில்குமார், 44; இவர் கடந்த, 27ல், பக்கத்து வீட்டை சேர்ந்த, 10 வயது சிறுமியின் கழுத்தில், கத்தியால் குத்தினார்.
இதில் படுகாயமடைந்த சிறுமி, அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். பின், மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், நேற்று முன்தினம் சிறுமி உயிரிழந்தார்.
இதையடுத்து, சிறுமியின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், மூன்று லட்சம் ரூபாய் நிதி வழங்க உத்தரவிட்டார். அதன்படி, நேற்று, ராசிபுரம் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த கலெக்டர் உமா, எஸ்.பி., ராஜேஷ்கண்ணன் ஆகியோர், குழந்தையின் பெற்றோரை அழைத்து, மூன்று லட்சம் ரூபாய் நிதி வழங்கினர்.
ஆனால், அந்த நிதியை வாங்க மறுத்த பெற்றோர், 'தங்களின் குழந்தைக்கு நீதி வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, 25 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும்' என, கோரிக்கை விடுத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.