/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
போதை டிரைவரை சிறைபிடித்து போலீசில் ஒப்படைத்த பயணிகள்
/
போதை டிரைவரை சிறைபிடித்து போலீசில் ஒப்படைத்த பயணிகள்
போதை டிரைவரை சிறைபிடித்து போலீசில் ஒப்படைத்த பயணிகள்
போதை டிரைவரை சிறைபிடித்து போலீசில் ஒப்படைத்த பயணிகள்
ADDED : ஆக 09, 2024 03:34 AM
ராசிபுரம்: ராசிபுரம் அருகே போதையில் வண்டி ஓட்டி வந்த பஸ் டிரை-வரை சிறைபிடித்து, பயணிகள் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
ராசிபுரத்தில் இருந்து சேலம் நோக்கி நேற்று இரவு தனியார் டவுன் பஸ், 50க்கும் மேற்பட்ட பயணிகளுடன் புறப்பட்டது. பஸ்சை வடுகம் குட்டக்கரையை சேர்ந்த மாரிமுத்து மகன் சிவக்-குமார் ஓட்டிச்சென்றுள்ளார். பஸ் புறப்பட்டதில் இருந்து தாறுமா-றாக ஓடியது. ராசிபுரம் நகரை தாண்டியதும் பஸ் சாலையில் கட்-டுப்பாடின்றி சென்றதால் பயணிகள் பீதி அடைந்தனர்.
ஒரு சிலர் டிரைவர் அருகே சென்று பார்த்துள்ளனர். டிரைவர் மீது மது நாற்றம் அடித்துள்ளது. அதுமட்டுமின்றி டிரைவர் சீட் அருகே மது கலந்த குளிர்பானமும் வைத்திருந்தது தெரிந்தது. இதையடுத்து ராசிபுரத்தில் இருந்து சேலம் செல்லும் சாலையில் தனியார் பள்ளி அருகே பஸ்சை நிறுத்தச்சொல்லி பயணிகள் சத்தம் போட்டனர். பஸ்சை டிரைவர் நிறுத்தியதும் அவரை சிறை-பிடித்தனர்.
இது குறித்து ராசிபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த போலீசார் பயணிகளை மாற்று பஸ்சில் அனுப்பி-விட்டு சிவக்குமார் மீது வழக்கு பதிந்தனர். பஸ்சை பறிமுதல் செய்ததுடன் சிவக்குமாரை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.