ADDED : ஜூன் 16, 2024 06:43 AM
சேந்தமங்கலம் : சேந்தமங்கலம்,
வண்டிப்பேட்டை ரவுண்டானா அருகே, எஸ்.எஸ்.ஐ., மோகன்ராம் மற்றும்
போலீசார், நேற்று முன்தினம் இரவு வாகன தணிக்கையில்
ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, வடுகப்பட்டி உப்பிலிய தெருவை சேர்ந்த
மணிவண்ணன், 45, மதுபோதையில் டூவீலரில் வந்துள்ளார். அப்போது,
போலீசார், மணிவண்ணனை விசாரித்த போது, அவர் தகாத வார்த்தையில்
பேசியுள்ளார். பின், சேந்தமங்கலம் டவுன் பஞ்., காமராஜபுரம், 1வது
வார்டை சேர்ந்த முன்னாள் பா.ஜ., பிரமுகர் செல்லமுத்து, 61,
என்பவருக்கு போன் செய்து வரவழைத்துள்ளனர். அங்கு வந்த
செல்லமுத்து, அங்கிருந்த போலீசாரை மிரட்டியதுடன், எஸ்.ஐ.,
பிரியாவை, 'என் ஆள் மீது வழக்குப்பதிவு செய்தால் காலி செய்து விடுவேன்'
என, மிரட்டியுள்ளார். இதையடுத்து, போலீசாரை மிரட்டிய
செல்லமுத்துவை போலீசார் கைது செய்தனர்.