/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கரிவரதராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம்
/
கரிவரதராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம்
ADDED : ஏப் 28, 2024 03:46 AM
ராசிபுரம்: ராசிபுரம் அடுத்த கடந்தப்பட்டியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீதேவி, பூதேவி சமேத கரிவரதராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது.
இக்கோவிலில் கடந்த, 51 ஆண்டுகளாக ராம நவமி விழா நடந்து வருகிறது. இந்தாண்டுக்கான ராமநவமி விழாவையொட்டி, கடந்த புதன்கிழமை உற்சவ மூர்த்தி மலைக்கு கொண்டு செல்லப்பட்டது. நேற்று முன்தினம், திருக்கோவில் சுத்தி வாஸ்து சாந்தி, சுதர்சன ஹோமம் செய்யப்பட்டது. தொடர்ந்து, ஆஞ்சநேயருக்கு வடமாலை சாற்றுதல், சுவாமி ஊர்வலம் ஆகியவை நடந்தது. மாலை திருக்கோடி தீபம் ஏற்றப்பட்டது. நேற்று காலை, 10:00 மணிக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. 7:00 மணிக்கு திருக்கோடி தீபம் ஏற்றி சுவாமி ஊர்வலமும், 9:00 மணிக்கு கடந்தப்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் பக்தி பாடல்களை பாடினர். 10:30 மணிக்கு மேல், திருக்கல்யாண உற்சவம், மஹா தீபாராதனை நடந்தது.

