/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கொல்லிமலை அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
/
கொல்லிமலை அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
கொல்லிமலை அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
கொல்லிமலை அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
ADDED : மே 26, 2024 07:30 AM
சேந்தமங்கலம் : நாமக்கல் மாவட்டம் கொல்லிமலைக்கு, விடுமுறை நாட்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். சில நாட்களாக மழை பெய்து வருவதால், அனைத்து நீர்வீழ்ச்சிகளிலும் தண்ணீர் கொட்ட ஆரம்பித்துள்ளது. இதில் சுற்றுலா பயணிகள் குளித்து சென்றனர்.
இந்நிலையில், தென்காசியில் குற்றால அருவியில் திடீர் வெள்ளம் கொட்டியதில், அருவியில் குளித்துக் கொண்டிருந்த, 15 வயது சிறுவன் நீரில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தார். இச்சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து, சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி, கொல்லிமலை ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, மாசிலா அருவி, நம்ம அருவி, புளியஞ்சோலை அருவிகளுக்கு செல்ல, கடந்த, 18 முதல் வனத்துறையினர் தடை விதித்தனர்.
தற்போது கொல்லிமலையில் மழை குறைந்துள்ளதால், நேற்று முதல் அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.