/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அருவியில் தண்ணீர் இல்லாததால் சுற்றுலா பயணியர் ஏமாற்றம்
/
அருவியில் தண்ணீர் இல்லாததால் சுற்றுலா பயணியர் ஏமாற்றம்
அருவியில் தண்ணீர் இல்லாததால் சுற்றுலா பயணியர் ஏமாற்றம்
அருவியில் தண்ணீர் இல்லாததால் சுற்றுலா பயணியர் ஏமாற்றம்
ADDED : மார் 25, 2024 01:10 AM
சேந்தமங்கலம்:நாமக்கல்
மாவட்டத்தில் சுற்றுலா தலமாக கொல்லிமலை உள்ளது. இங்கு
வாரந்தோறும் விடுமுறை தினமான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில், பல்வேறு
பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், கொல்லிமலையை சுற்றியுள்ள பகுதிகளில், கடந்த, 3
ஆண்டாக நல்ல மழை பெய்ததால் ஆகாய கங்கை, மாசிலா அருவி, நம்மருவிகளில்
தண்ணீர் குறையாமல் இருந்தது. ஆனால், இந்தாண்டு கொல்லிமலையில் போதிய
மழையில்லாததால் அருவிகளில் தண்ணீர் இல்லாமல் வரண்டு
காணப்படுகிறது. விடுமுறை தினமான நேற்று, நாமக்கல், திருச்சி, சேலம்,
உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணியர்
கொல்லிமலைக்கு படையெடுத்தனர்.
ஆனால், மாசிலா அருவி,
நம்மருவிகளில் தண்ணீரின்றி வறண்டு காணப்பட்டதால், அருவிகள்
மூடப்பட்டன. இதனால், சுற்றுலா பயணியர் குளிக்க முடியாமல்
ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.