/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஆர்ப்பரித்த அருவியில் சுற்றுலா பயணிகள் உற்சாகம்
/
ஆர்ப்பரித்த அருவியில் சுற்றுலா பயணிகள் உற்சாகம்
ADDED : ஆக 18, 2024 03:59 AM
சேந்தமங்கலம்: கொல்லிமலை வனப்பகுதியில் பெய்த கனமழையால், ஆர்ப்ப-ரித்து கொட்டிய மாசிலா அருவியில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல் போட்டு மகிழ்ந்தனர்.
நாமக்கல் மாவட்டத்தின் மூலிகை நிறைந்த சுற்றுலா தலமாக கொல்லிமலை உள்ளது. வார விடுமுறை நாட்களில், இங்கு, தமி-ழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பய-ணிகள் வந்து செல்கின்றனர். கடந்த, இரண்டு மாதமாக கொல்லி-மலையில் பெய்த கன மழையால், ஆகாய கங்கை, மாசிலா அருவி, நம்மருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இந்த அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்னர்.இந்நிலையில், கொல்லிமலை வனப்பகுதியில், கடந்த ஒரு வாரமாக நல்ல மழை பெய்துள்ளதால், தற்போது மாசில அரு-வியில் தண்ணீர் அதிகரித்து, ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால், நேற்று கொல்லிமலைக்கு வந்த சுற்றுலா பயணிகள், நீண்ட வரிசையில் நின்று, மாசில அருவியில் குளித்து குதுாகலம-டைந்தனர்.

