/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
காலாவதி இன்சூரன்சுடன் டவுன் பஞ்., வாகனங்கள் கண்டுகொள்ளாத போக்குவரத்து துறை அலுவலர்கள்
/
காலாவதி இன்சூரன்சுடன் டவுன் பஞ்., வாகனங்கள் கண்டுகொள்ளாத போக்குவரத்து துறை அலுவலர்கள்
காலாவதி இன்சூரன்சுடன் டவுன் பஞ்., வாகனங்கள் கண்டுகொள்ளாத போக்குவரத்து துறை அலுவலர்கள்
காலாவதி இன்சூரன்சுடன் டவுன் பஞ்., வாகனங்கள் கண்டுகொள்ளாத போக்குவரத்து துறை அலுவலர்கள்
ADDED : ஆக 18, 2024 04:01 AM
ப.வேலுார்: பரமத்தி வேலுார் தாலுகாவில் உள்ள டவுன் பஞ்.,களில், குப்பை சேகரிக்க பயன்படுத்தப்பட்டு வரும் மினி லாரி, டிராக்-டர்கள், காலாவதி இன்சூரன்சுடன் உலா வருகின்றன. இதை போக்குவரத்து போலீசார், போக்குவரத்து துறை அலுவர்கள் கண்-டுகொள்ளாமல் உள்ளனர்.
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலுார் தாலுகாவில், ப.வேலுார், பொத்தனுார்,  பாண்டமங்கலம், வெங்கரை, பர-மத்தி ஆகிய, ஐந்து டவுன் பஞ்.,கள் உள்ளன. இப்பகுதிகளில் குப்பை சேகரிக்க, டவுன் பஞ்., சார்பில், மினி லாரி, டிராக்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, ப.வேலுாரில், 2 டிராக்டர், 1 மினி லாரி; பொத்தனுாரில், 2 டிராக்டர், ஒரு மினி லாரி; பரமத்தியில், ஒரு டிராக்டர், ஒரு மினி லாரி; வெங்க-ரையில், ஒரு மினி லாரி, ஒரு டிராக்டர்; பாண்டமங்கலத்தில், ஒரு டிராக்டர் என, மொத்தம், 11 வாகனங்கள் உள்ளன. இதில், ஏழு வாகனங்களுக்கு, எப்.சி., இன்சூரன்ஸ் இரண்டும், மூன்று வாக-னங்களுக்கு, இன்சூரன்ஸ், பல மாதங்களுக்கு முன்பே காலாவதி-யாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவது:வீடு, கடைகளுக்கு, சொத்து வரி, குடிநீர் வரி, தொழில் வரி செலுத்த தவறினால், டவுன் பஞ்., அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி, அபராதம் விதிக்கின்றனர். ஆனால், டவுன் பஞ்.,க்கு சொந்தமான குப்பை வண்டிகளுக்கு முறையாக இன்சூரன்ஸ், எப்.சி.,யை புதுப்பிக்காமல் உள்ளனர். மக்கள் மீது வேகமாக நட-வடிக்கை எடுக்கும் போக்குவரத்து போலீசார், இதனை கண்டு-கொள்ளாமல் இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. அதே போல் போக்குவரத்து துறை அலுவலர்களும் கண்டுகொள்ளாமல் உள்ளனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.இதுகுறித்து, பரமத்தி மோட்டார் வாகன ஆய்வாளர் சரவணன் கூறுகையில், ''டவுன் பஞ்.,க்கு சொந்தமான குப்பை அள்ளும் மினி லாரி, டிராக்டர்களை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.ப.வேலுார், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ஜெகன் கூறு-கையில், ''என்னுடைய கவனத்துக்கு தற்போது தான் வந்துள்ளது. சம்பந்தப்பட்ட டவுன் பஞ்., செயல் அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்து, உடனடியாக வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் கட்ட நட-வடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

