/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பள்ளத்தில் பாய்ந்த டூவீலர்: ஒருவர் பலி
/
பள்ளத்தில் பாய்ந்த டூவீலர்: ஒருவர் பலி
ADDED : ஏப் 28, 2024 03:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எருமப்பட்டி: திருச்சி மாவட்டம், முசிறி ஊருடையாம்பட்டியை சேர்ந்தவர் சுதாகர், 40. இவர், திருப்பதி சென்று விட்டு, நேற்று அதிகாலை, இரவது மனைவி சுகன்யாவுடன், டூவீலரில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். பொட்டிரெட்டிபட்டி, கன்னிமார் கோவில் அருகே சென்ற போது, துாக்க கலக்கத்தில் டூவீலர் பள்ளத்தில் பாய்ந்தது. இதில், இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.
அருகில் இருந்தவர்கள், சுதாகர், சுகன்யாவை மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர், சுதாகர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். எருமப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

