/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
டூவீலரில் சென்ற வாலிபர் விபத்தில் சிக்கி பலி
/
டூவீலரில் சென்ற வாலிபர் விபத்தில் சிக்கி பலி
ADDED : ஆக 03, 2024 01:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையம் அருகே, வெப்படையை சேர்ந்தவர் நந்தபாலன், 21; தந்தையுடன் வெல்டிங் பணி செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு, 8:30 மணிக்கு, டூவீலரில் வெப்படை பஸ் ஸ்டாப் பகுதியில் இருந்து குமாரபாளையம் செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தார். முன்னால் சென்ற லாரியை முந்த முயன்றபோது, நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
அப்போது, லாரியின் பின் சக்கரம் ஏறியதில், தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே நந்தபாலன் உயிரிழந்தார். இதுகுறித்து வெப்படை போலீசார் விசாரிக்கின்றனர்.