/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நாமக்கல் - மோகனுார் சாலையில் அனுமதியின்றி மரங்கள் அகற்றம்: இயற்கை ஆர்வலர்கள் அதிர்ச்சி

ADDED : செப் 03, 2024 04:26 AM
நாமக்கல்: சாலையோரம் நன்கு வளர்ந்திருந்த மரங்களை, நெடுஞ்சாலைத்து-றையின் அனுமதியின்றி வெட்டி அகற்றியது, இயற்கை ஆர்வலர்-களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
நாமக்கல் - மோகனுார் சாலையில், லத்துவாடியில் இருந்து, மோகனுார் வரை உள்ள சாலையை, கடந்த, அ.தி.மு.க., ஆட்-சியில், 64 கோடி ரூபாய் மதிப்பில், இரு வழி சாலையாக மாற்-றப்பட்டது. இதையடுத்து, சாலையோரம் இருந்து மரங்கள் அகற்-றப்பட்டன. சாலைப்பணி முழுமையாக முடிந்ததை அடுத்து, புதி-தாக, சாலையின் இருபுறமும், நுாற்றுக்கணக்கான மரங்கள் நடப்-பட்டு, நெடுஞ்சாலைத்துறை மூலம் பராமரிக்கப்பட்டது. தற்-போது அந்த மரங்கள் நன்கு வளர்ந்து செழிப்புடன் காணப்படு-கின்றன.
இந்நிலையில், நாமக்கல் - மோகனுார் சாலை, தோப்பூர் கொங்கு திருமண மண்டபம் எதிரில், நிலம் சமன் செய்யப்பட்டது. அப்-போது, சாலையோரம் இருந்து பத்துக்கும் மேற்பட்ட மரங்களை, எவ்வித அனுமதியும் இன்றி, வெட்டி அகற்றி உள்ளனர். இது இயற்கை ஆர்வலர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
இதுகுறித்து, நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் திருகு-ணாவிடம் கேட்டபோது, ''மரங்களை வெட்டுவதற்கு எவ்வித அனுமதியும் பெறவில்லை. இது தொடர்பாக என் கவனத்திற்கும் வரவில்லை. விசாரித்ததில், வாகனங்களை நிறுத்துவதற்காக, மரங்களின் கிளைகளை மட்டும் அகற்றியதாக தெரிவித்துள்ளனர். இருந்தும், விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளேன்,'' என்றார்.