/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கோழிகளுக்கு 'லசோட்டா' தடுப்பூசி: பண்ணையாளர்களுக்கு அறிவுறுத்தல்
/
கோழிகளுக்கு 'லசோட்டா' தடுப்பூசி: பண்ணையாளர்களுக்கு அறிவுறுத்தல்
கோழிகளுக்கு 'லசோட்டா' தடுப்பூசி: பண்ணையாளர்களுக்கு அறிவுறுத்தல்
கோழிகளுக்கு 'லசோட்டா' தடுப்பூசி: பண்ணையாளர்களுக்கு அறிவுறுத்தல்
ADDED : மார் 24, 2024 01:25 AM
நாமக்கல், 'கோழிகளுக்கு, 'லசோட்டா' தடுப்பூசி போட வேண்டும்' என, பண்ணையாளர்களுக்கு, நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலைய வானிலை ஆலோசனை மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிட்ட அறிக்கை: நாமக்கல் மாவட்ட வானிலையில் கடந்த வாரம் பகல், இரவு நேர வெப்ப அளவுகள் முறையே, 99.5 பாரன்ஹீட் மற்றும் 62.6 டிகிரி பாரன்ஹீட்டாக நிலவியது. மாவட்டத்தில் மழை பதிவாகவில்லை. அடுத்த ஐந்து நாட்களுக்கு வானம் லேசான மேகமூட்டத்துடனும், சில இடங்களில் லேசான மழையும் காணப்படும்.
கோழியின நோய் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு ஆய்வகத்தில் ஆய்வு செய்யப்பட்ட இறந்த கோழிகள், பெரும்பாலும் வெப்ப அயற்சி நோய் தாக்கத்தால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளது தெரியவந்துள்ளது. எனவே, பண்ணையாளர்கள் கோடைகால பராமரிப்பு முறைகளை கையாளுமாறும், வெப்ப அயற்சியின் தாக்கத்தை குறைக்க தெளிப்பான் உபயோகிக்குமாறும், வெயில் குறைந்த நேரங்களில் அதிகாலை மற்றும் மாலை வேலைகளில் தீவனம் அளிக்குமாறும், தீவனத்தில் வைட்டமின், 'சி', பீட்டைன் மற்றும் நுண்ணுாட்டச்சத்துக்கள் உபயோகிக்க வேண்டும்.
மேலும், வெள்ளை கழிச்சல் நோய்க்கு தேவையான எதிர்ப்பு சக்தி உள்ளதா என ஊநீர் பரிசோதனை செய்து எதிர்ப்பு சக்தியின் அளவு, 2 முதல் 7 வரையிலான அளவிற்கு குறைவாக இருந்தால், 'லசோட்டா' தடுப்பூசி அளிக்க வேண்டும்.

