/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
சாய்பாபா கோவிலில் வருஷாபிஷேக விழா
/
சாய்பாபா கோவிலில் வருஷாபிஷேக விழா
ADDED : செப் 08, 2024 07:45 AM
ப.வேலுார்: பரமத்தி அருகே, தொட்டிப்பட்டி கிராமத்தில் சாய்பாபா கோவில் உள்ளது. பத்தாமாண்டு தொடக்க விழாவையொட்டி, நேற்று அதி-காலை, 4:00 மணிக்கு தீபாராதனையுடன் விழா தொடங்கியது. 5:00 மணிக்கு ஹோமம் நிகழ்ச்சியும், 6:00 மணிக்கு கோபுர கலச அபிஷேகம், மங்களஸ்தானம் நிகழ்ச்சியும், 7:00 மணிக்கு சங்கல்ப பூஜை, மாலை, 6:00 மணிக்கு கூட்டு பிரார்த்தனை, மகா நெய்-வேத்திய நிகழ்ச்சி நடந்தது.
இறுதியாக இரவு, 7:00 மணிக்கு சாய்-பாபாவுக்கு தீபாராதனையுடன் விழா நிறைவடைந்தது. நேற்று, நாள் முழுதும் சாய் நாம ஜெபம் நடந்தது. நாமக்கல், கரூர், தொட்டியம், ப.வேலுார், மோகனுார்,
பரமத்தி பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. விழா
ஏற்பாடுகளை, சீரடி சாய்பாபா வழி-பாட்டு மன்ற நிர்வாகிகள் செய்திருந்தனர்.