ADDED : ஆக 26, 2024 02:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குமாரபாளையம்: தே.மு.தி.க., நிறுவன தலைவர் விஜயகாந்த் பிறந்த நாளை-யொட்டி, குமாரபாளையத்தில் அக்கட்சியினர் வறுமை ஒழிப்பு தினமாக கொண்டாடினர்.
நகர செயலர் நாராயணசாமி, மாவட்ட பொருளாளர் மகாலிங்கம் தலைமை வகித்தனர். பஸ் ஸ்டாண்ட் அருகே நடந்த நிகழ்ச்-சியில், மாவட்ட செயலர் விஜயசரவணன், விஜயகாந்த் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து, கட்சிக்கொடி ஏற்றி இனிப்பு வழங்கினர். மேலும், ஏழை, எளியவர்களுக்கு இலவச வேட்டி, சேலை, அன்னதானம் வழங்கப்பட்டது.

