பல்வேறு அடிப்படை வசதி கேட்டு எம்.பி.,யிடம் கிராம மக்கள் மனு
பல்வேறு அடிப்படை வசதி கேட்டு எம்.பி.,யிடம் கிராம மக்கள் மனு
ADDED : செப் 11, 2026 06:13 AM
ராசிபுரம்:நாமகிரிப்பேட்டை
அருகே மொபைல்போன் டவர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து
தரக்கோரி, கொ.ம.தே.க., நாமக்கல் எம்.பி., மாதேஸ்வரனிடம் கிராம மக்கள்
மனு கொடுத்தனர்.
நாமகிரிப்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட
நாரைக்கிணறு, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில், 100க்கும்
மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் போதிய
மொபைல் டவர் இணைப்பு இல்லாதது, முறையான சாலை மற்றும் குடிநீர் வசதி
இல்லாமல் மக்கள் சிரமப்பட்டு வந்தனர். மேலும் குடியிருப்பு
பகுதிகளுக்கு பட்டா வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு
கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த சில தினங்களுக்கு முன்பு பாரம்பரிய
உழவர் நலச்சங்க தலைவர் ஜெகதீசன் தலைமையில், நாமக்கல் கலெக்டர்
அலுவலகத்தில் மனு அளித்திருந்தனர்.
இந்நிலையில், நாமக்கல் எம்.பி.,
மாதேஸ்வரன், கிராம பகுதிக்கு நேற்று நேரில் சென்று மக்களை
சந்தித்தார். அப்போது கிராம மக்கள், தங்கள் பகுதியில் உள்ள மொபைல் டவர்
பற்றாக்குறை, மோசமான சாலை மற்றும் வீட்டுமனை பட்டா உள்ளிட்ட
அத்தியாவசிய தேவைகள் குறித்து மனு அளித்தனர்.
மனுவை
பெற்றுக்கொண்ட எம்.பி., மாதேஸ்வரன், ''நீண்ட நாள் கோரிக்கைகளான
மொபைல் டவர் மற்றும் சாலை வசதி குறித்து மத்திய, மாநில அரசுகளின்
கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நிதி பெற்று, பிரச்னைகளுக்கு தீர்வு
காணப்படும்,'' என்றார்.
