/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நாமக்கல் மாவட்டத்தில் பரவலாக கோடை மழை
/
நாமக்கல் மாவட்டத்தில் பரவலாக கோடை மழை
ADDED : மே 10, 2024 02:30 AM
நாமக்கல்:நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று மழை பெய்தது.கடந்த ஒரு மாதமாக வெயில் வாட்டி வதைத்து வந்தது.
இந்நிலையில் நேற்று மாலை மாவட்டத்தின் பல இடங்களில் பரவலாக மழை பெய்தது. மோகனுார் பகுதியில் மாலை, 6:00 மணியில் இருந்து, 7:00 மணி வரை கன மழை பெய்தது. சாலையோரங்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மழையால் இரவில் குளிர்காற்று வீசியது.அதேபோல் ஆண்டகலுார் கேட், கவுண்டம்பாளையம், அத்தனுார் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை கன மழை பெய்தது. ராசிபுரத்தில், 30 நிமிடம் மழை பெய்தது. அதேபோல், பச்சுடையாம்பாளைம், பேளுக்குறிச்சி, மூலப்பள்ளிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் காற்று பலமாக அடித்ததால் துாறல் மட்டுமே பெய்தது. மானாவாரி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கோடை உழவுக்கு வசதியாக மழை பெய்துள்ளதால், இன்றிலிருந்து உழவு பணியை தொடங்க வாய்ப்புள்ளது.