sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 24, 2025 ,ஐப்பசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

ராசிபுரம் அருகே பெண் எரித்து கொலை

/

ராசிபுரம் அருகே பெண் எரித்து கொலை

ராசிபுரம் அருகே பெண் எரித்து கொலை

ராசிபுரம் அருகே பெண் எரித்து கொலை


ADDED : ஜூலை 26, 2024 03:02 AM

Google News

ADDED : ஜூலை 26, 2024 03:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராசிபுரம்: ராசிபுரம் அருகே, இளம் பெண்ணை எரித்து கொலை செய்துள்-ளனர்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த பட்டணம் டவுன் பஞ்சா-யத்துக்கு உட்பட்ட பகுதியில், 140 ஏக்கர் பரப்பளவில் ஏரி உள்-ளது. ஏரி கரையில் மாலை நேரத்தில் சிலர் மது அருந்துவது வழக்கம். ஏரிக்கு அருகில் வசிப்பவர் விவசாயி பழனிவேல், 60. நேற்று மாடு மேய்ப்பதற்காக மாடுகளுடன் ஏரிக்கு சென்றுள்ளார். அப்போது ஏரிக்கரையில் எரிந்த நிலையில் பெண் சடலம் கிடப்-பதை கண்டு அதிர்ச்சி அடைந்த பழனிவேல், ராசிபுரம் போலீ-சாருக்கு தகவல் தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு வந்த ராசிபுரம் போலீசார் சடலத்தை கைப்-பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலை செய்யப்-பட்ட பெண்ணுக்கு, 25 வயது இருக்கும். இறந்த பெண் அணிந்-திருந்த நகைகள், கொலுசு, மெட்டி ஆகியவை அப்படியே இருந்-ததால் நகைக்காக கொலை செய்யப்படவில்லை என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவ இடத்திற்கு

எஸ்.பி., ராஜேஸ்கண்ணன், டி.எஸ்.பி., விஜயகுமார் ஆகியோர் நேரில் வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பட்டணம் அடுத்த குச்சிக்காட்டை சேர்ந்த ரமேஷ், 35, என்பவரின் மனைவி மணிமேகலை, 29, என்பது தெரியவந்துள்ளது. ரமேஷ் மங்களபு-ரத்தை அடுத்த பரவைக்காட்டை சேர்ந்தவர். முதல் மனைவியை விட்டு பிரிந்து மணிமேகலையை, 2வது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருப்பதும் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்தது. மணிமேகலையை யார் எரித்துக்கொன்றனர் என்று போலீசார் விசாரித்து வருகின்-றனர்.






      Dinamalar
      Follow us