/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மக்கள் சிரமமின்றி ஓட்டுப்போடும் வகையில் பணியாற்ற வேண்டும்: மாவட்ட தேர்தல் அலுவலர்
/
மக்கள் சிரமமின்றி ஓட்டுப்போடும் வகையில் பணியாற்ற வேண்டும்: மாவட்ட தேர்தல் அலுவலர்
மக்கள் சிரமமின்றி ஓட்டுப்போடும் வகையில் பணியாற்ற வேண்டும்: மாவட்ட தேர்தல் அலுவலர்
மக்கள் சிரமமின்றி ஓட்டுப்போடும் வகையில் பணியாற்ற வேண்டும்: மாவட்ட தேர்தல் அலுவலர்
ADDED : மார் 25, 2024 01:08 AM
நாமக்கல்:''லோக்சபா தேர்தல் சிறப்பாகவும், அமைதியாகவும், பொதுமக்கள் சிரமமின்றி ஓட்டுப்போடும் வகையில், பணிகளை மேற்கொள்ள வேண்டும்,'' என, மாவட்ட தேர்தல் அலுவலர் உமா அறிவுறுத்தினார்.
நாமக்கல் லோக்சபா தேர்தலை முன்னிட்டு, 6 சட்டசபை தொகுதிகளில், 1,628 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஓட்டுச்சாவடிகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் நிறைவேற்றும் வகையில், அலுவலர்கள் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, ஓட்டுப்பதிவு நாளான வரும் ஏப்., 19ல், பணியாற்ற, ஒவ்வொரு ஓட்டுச்சாவடிகளிலும், தலா, ஒரு முதன்மை அலுவலர், மூன்று நிலைகளிலான ஓட்டுச்சாவடி அலுவலர்கள் என, மொத்தம், 4 அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ராசிபுரம் சட்டசபையில், 1,374 பேர், சேந்தமங்கலம், 1,192 பேர், நாமக்கல், 1,781 பேர், ப.வேலுார், 1,062 பேர், திருச்செங்கோடு, 1,431 பேர், குமாரபாளையம், 1,954 பேர் என, மொத்தம், 7,816 அலுவலர்களுக்கு, முதற்கட்ட பயிற்சி வகுப்பு, நேற்று நடந்தது.நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் உமா, மாவட்டத்தில் உள்ள, 6 சட்டசபை தொகுதிகளில் நடந்த முதற்கட்ட பயிற்சி வகுப்பை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, ''லோக்சபா தேர்தல் சிறப்பாகவும், அமைதியாகவும், பொதுமக்களுக்கு எவ்வித சிரமமின்றி ஓட்டுப்போட ஏதுவாக ஓட்டுச்சாவடி மையங்களில் பணிகளை மேற்கொள்ள வேண்டும்,'' என அறிவுறுத்தினார்.
உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பார்த்திபன், சுகந்தி, பிரபாகரன், முத்துராமலிங்கம், பாலகிருஷ்ணன், முருகன், முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி உள்பட பலர் பங்கேற்றனர்.

