/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அம்மன் கழுத்தில் இருந்து 1 பவுன் தங்க காசு திருட்டு
/
அம்மன் கழுத்தில் இருந்து 1 பவுன் தங்க காசு திருட்டு
அம்மன் கழுத்தில் இருந்து 1 பவுன் தங்க காசு திருட்டு
அம்மன் கழுத்தில் இருந்து 1 பவுன் தங்க காசு திருட்டு
ADDED : ஏப் 30, 2025 01:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ப.வேலுார்:-
நாமக்கல் கந்தம்பாளையம் அருகே, மணியனுார், வண்ணாம்பாறை பகுதியில் வீரமாத்தி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் பெருங்குறிச்சி, உப்புபாளையத்தை சேர்ந்த வரதராஜ், 62, பூசாரியாக உள்ளார். நேற்று முன்தினம் இரவு, கோவிலை பூட்டிவிட்டு சென்றார். நேற்று காலை கோவிலை திறக்க வந்தபோது, பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சிய
டைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ மற்றும் உண்டியல் அனைத்தும் உடைக்கப்பட்டிருந்தது.  மேலும், அம்மன் கழுத்தில் அணிந்திருந்த ஒரு பவுன் தங்க காசு திருடப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து நல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.