/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஆந்திராவில் செம்மரம் வெட்ட பஸ்சில் சென்ற 10 பேர் கைது
/
ஆந்திராவில் செம்மரம் வெட்ட பஸ்சில் சென்ற 10 பேர் கைது
ஆந்திராவில் செம்மரம் வெட்ட பஸ்சில் சென்ற 10 பேர் கைது
ஆந்திராவில் செம்மரம் வெட்ட பஸ்சில் சென்ற 10 பேர் கைது
ADDED : ஜூலை 16, 2025 01:09 AM
வேலுார், ஆந்திராவில் செம்மரம் வெட்ட அரசு பஸ்சில் சென்ற, 10 பேரை, குடியாத்தம் போலீசார் கைது செய்து, கோடாரி உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்துள்ளனர். வேலுார் மாவட்டம், குடியாத்தத்தில், ஒரு கும்பல் ஆந்திராவிற்கு செம்மரம் வெட்ட அரசு பஸ்சில் செல்வதாக, குடியாத்தம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி போலீசார், வேலுாரிலிருந்து, கே.ஜி.எப்., செல்லும் அரசு பஸ்சை மடக்கி சோதனை செய்தனர். அதில்,
திருவண்ணாமலை, வேலுார், திருப்பத்துார் மாவட்டங்களை சேர்ந்த, 10 பேர், கத்தி, கோடாரி போன்ற ஆயுதங்களுடன், ஆந்திராவிற்கு செம்மரம் வெட்ட சென்றது தெரிந்தது. இதையடுத்து, 10 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்கள் வைத்திருந்த ஆயுதங்களை பறிமுதல்
செய்து விசாரித்து வருகின்றனர்.