/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கோழி பண்ணையில் பதுக்கிய 10 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
/
கோழி பண்ணையில் பதுக்கிய 10 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
கோழி பண்ணையில் பதுக்கிய 10 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
கோழி பண்ணையில் பதுக்கிய 10 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
ADDED : அக் 24, 2025 01:21 AM
மல்லசமுத்திரம் கோழி பண்ணையில் பதுக்கி வைத்திருந்த, 10,200 கிலோ ரேஷன் அரிசியை குற்றபுலனாய்வுத்துறை அதிகாரி கள் கைப்பற்றினர்.
மல்லசமுத்திரம் அருகே, மொஞ்ஞனுார் கிராமம், அரசம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு கோழி பண்ணையில், ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக, குடிமைப்பொருள் வழங்கல் குற்றபுலனாய்வுத்துறை கோவை மண்டல
எஸ்.பி., பாலாஜிசரவணனுக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, எஸ்.ஐ.,க்கள் குப்புராஜ், பிரியதர்ஷனி, திருச்செங்கோடு வட்ட வழங்கல் அலுவலர் கனகலட்சுமி உள்ளிட்டோர், நேற்று பார்த்திபன் என்பவரது கோழி தீவன மில்லில் தணிக்கை செய்தனர்.
இதில், 50 கிலோ எடையுள்ள, 178 பிளாஸ்டிக் சாக்கு மூட்டைகளில், 8,900 கிலோ ரேஷன் அரிசி, 50 கிலோ எடையுள்ள, 26 சாக்கு மூட்டைகளில், 1,300 கிலோ பச்சரிசி என மொத்தம், 10,200 கிலோ பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ரேஷன் அரிசியை கைப்பற்றியதுடன், தலைமறைவாக உள்ள கோழி பண்ணை உரிமையாளர் பார்த்திபனை போலீசார் தேடி வருகின்றனர்.

