தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ 100 சதவீதம் ஓட்டுப்பதிவு மக்களுக்கு விழிப்புணர்வு

100 சதவீதம் ஓட்டுப்பதிவு மக்களுக்கு விழிப்புணர்வு

100 சதவீதம் ஓட்டுப்பதிவு மக்களுக்கு விழிப்புணர்வு


ADDED : மார் 26, 2026 05:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 26, 2026 05:36 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நாமக்கல், நாமக்கல் மாநகராட்சி கமிஷனர் சிவகுமார் உத்தரவுப்படி, நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் பகுதிகளில், 100 சதவீதம் ஓட்டுப்பதிவை வலியுறுத்தி, பொது மக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு, 'சட்டசபை தேர்தலில் அனைவரும் தவறாமல், 100 சதவீதம் ஓட்டுபோடுவோம்' என, உறுதிமொழியேற்றனர்.

தொடர்ந்து, ஓட்டுப்போடுவதன் அவசியம் குறித்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வினியோகம் செய்யப்பட்டது. மாநகராட்சி சுகாதார அலுவலர் திருமூர்த்தி, ஆய்வாளர்கள் செல்வகுமார், ஜான், நந்தினி, அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us