ADDED : மார் 26, 2026 05:44 AM
குமாரபாளையம்மிழகத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பல்வேறு பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன. வாக்காளர்களுக்கு பண பட்டுவாடா, பரிசு பொருட்கள் வழங்குவது தடுக்க, தேர்தல் ஆணையத்தால் பறக்கும்படை நியமிக்கப்பட்டுள்ளது. இந்த பறக்கும்படை அதிகாரிகள், பல்வேறு இடங்களில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். குமாரபாளையம் தாலுகா அலுவலகத்தில் அனைத்து கட்சியினருடன் தேர்தல் நடத்தும் அலுவலர் குமரன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
தேர்தல் மேலிட பார்வையாளர் சஞ்சய் லாலா சாகேப் யாதவ் பங்கேற்று, அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். நேற்று, குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் குமரன் தலைமையில், '100 சதவீதம் ஓட்டளிக்க வேண்டும்' என, விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. மகளிர் குழுவினர், மாற்றுத்திறனாளிகள் உள்பட பலர் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். தாசில்தார் பிரகாஷ், இன்ஸ்பெக்டர் தவமணி, தேர்தல் பிரிவு தாசில்தார் செல்வராஜ், நகராட்சி கமிஷனர் ரமேஷ், ஆர்.ஐ., புவனேஸ்வரி, வி.ஏ.ஓ.,க்கள் முருகன், செந்தில்குமார், தியாகராஜன், ஜனார்த்தனன், தேவராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.
