தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ 100 சதவீதம் வாக்களிக்க விழிப்புணர்வு உறுதிமொழி

100 சதவீதம் வாக்களிக்க விழிப்புணர்வு உறுதிமொழி

100 சதவீதம் வாக்களிக்க விழிப்புணர்வு உறுதிமொழி


ADDED : ஏப் 04, 2026 05:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 04, 2026 05:26 AM


Follow on Google
அ நிறம் | அளவு

குமாரபாளையம் :குமாரபாளையம் தாலுகா அலுவலகத்தில், அனைத்து கட்சியினருடன், தேர்தல் நடத்தும் அலுவலர் குமரன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. தேர்தல் மேலிட பார்வையாளர் சஞ்சய் லாலா சாகேப் யாதவ் பங்கேற்று அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். நேற்று, குமாரபாளையம் நகராட்சி, சுந்தரம் நகர் பகுதியில் தேர்தல் நடத்தும் அலுவலர் குமரன் தலைமையில், '100 சதவீதம் வாக்களிக்க வேண்டும்' என்ற விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது.

அதில், 'தேர்தலில், 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும்' என, வண்ண கோலங்கள் வரையப்பட்டிருந்தன. தாசில்தார் பிரகாஷ், இன்ஸ்பெக்டர் தவமணி, தேர்தல் பிரிவு தாசில்தார் செல்வராஜ், நகராட்சி ஆணையர் ரமேஷ், ஆர்.ஐ., புவனேஸ்வரி, வி.ஏ.ஓ.,க்கள் செந்தில்குமார், தியாகராஜன், ஜனார்த்தனன், தேவராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us