ADDED : ஏப் 16, 2026 05:33 AM
அ நிறம் | அளவு
சேந்தமங்கலம் : தமிழக சட்டசபை தேர்தலில், 100 சதவீதம் ஓட்டளிக்க வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, சேந்தமங்கலம் அடுத்துள்ள கொண்டமநாயக்கன் பட்டி பகுதியில் உள்ள பேரம்மாவூர் கிராமத்தில், 100 சதவீதம் அனைவரும் ஓட்டளிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், வாக்களிக்கும் சின்னத்தை கலர் பொடி மூலம் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தொடர்ந்து, விழிப்புணர்வு பேரணி மற்றும் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி என பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. மகளிர் நல திட்டங்களின் வட்டார மேலாளர் விவேகா, ஒருங்கிணைப்பாளர் மோகன பிரியா மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
