தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ அடிவாரத்தில் சோதனை 100 பேருக்கு அபராதம்

அடிவாரத்தில் சோதனை 100 பேருக்கு அபராதம்

அடிவாரத்தில் சோதனை 100 பேருக்கு அபராதம்


ADDED : செப் 25, 2026 06:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 25, 2026 06:48 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேந்தமங்கலம்,:நாமக்கல் மாவட்டத்தில், இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலா தலமாக கொல்லிமலை அமைந்துள்ளது. அதனால், இங்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகை தருவர். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள், அதிகளவில் பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்களை கொண்டு வந்து ஆங்காங்கே வீசி செல்கின்றனர். இதனால் கொல்லிமலையில் அதிகளவில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.

மேலும், டூவீலரில் வரும் பயணிகள், 'ஹெல்மெட்' அணியாமல் வருவதால் அடிக்கடி விபத்தில் சிக்கி படுகாயமடைகின்றனர். சில நேரங்களில் உயிரிழப்பும் ஏற்படுகிறது. இதனால், சேந்தமங்கலம் இன்ஸ்பெக்டர் அந்தோணி மைக்கேல் தலைமையிலான போலீசார், நேற்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, டூவீலரில், 'ஹெல்மெட்' அணியாமல் சென்ற, 100க்கும் மேற்பட்டோருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அதேபோல், பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில், கூல் டிரிங்ஸ், பிளாஸ்டிக் கவர் உள்ளிட்ட பொருட்களை கொண்டு வந்தவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us