நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேந்தமங்கலம், சேந்தமங்கலம் அக்ரஹாரம் பகுதியில் அமைந்துள்ள பால தண்டாயுதபாணி கோவிலில், கடந்த வாரம் முழுவதும் கந்த சஷ்டி பூஜை நடந்தது.
அதை தொடர்ந்து வெள்ளிக்கிழமையான, நேற்று மதியம், 12:00 மணிக்கு பால தண்டாயுதபாணி கோவிலின் உள்பிரகாரத்தில், 108 அகல் விளக்குகளால், 'ஓம்' என்ற எழுத்தை வடிவமைத்து பூஜை நடந்தது.
தொடர்ந்து, மூலவருக்கு வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடந்தது. சுற்று வட்டாரத்தை சேர்ந்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

