ADDED : ஜூலை 12, 2025 01:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராசிபுரம் :ராசிபுரத்தில் பிரசித்தி பெற்ற நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு முக்கிய விசேஷ தினங்களில், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடப்பது வழக்கம்.
நேற்று ஆனி மாத கடைசி வெள்ளியையொட்டி, 108 திருவிளக்கு பூஜை மற்றும் சுமங்கலி பூஜை நடந்தது. முன்னதாக, லட்சுமி கணபதி ஹோமம், விநாயகர், பாலமுருகன், மாரியம்மன் உள்ளிட்ட சுவாமிக்கு அபிஷேகம், ஆராதனை செய்தனர். தொடர்ந்து, இரவு, 108 திருவிளக்கு பூஜை மற்றும் சுமங்கலி பூஜை நடந்தது. திருவிளக்கு பூஜையில் சுமங்கலி பெண்கள், மாங்கல்யத்துடன் நீடித்து வாழ பூஜை செய்தனர்.