ADDED : அக் 13, 2024 08:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குமாரபாளையம்: நவராத்திரியையொட்டி, குமாரபாளையத்தில் அனைத்து அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. பட்டத்தரசியம்மன் கோவிலில் அம்மனுக்கு அன்னாபிஷேகம், 108 திருவிளக்கு வழிபாடு நடத்தப்பட்டது.
நவராத்திரி கொலு வைக்கப்பட்டு தினமும் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. 108 திருவிளக்கு பூஜையில்
பெண்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர். சேலம் சாலை சவுண்டம்மன் கோவில், அம்மன் நகர் எல்லை மாரியம்மன் கோவில் ஆகிய கோவில்களில்
அம்மன் சிம்ம வாகனத்தில் அருள்பாலித்தார். பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.