/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மாரியம்மன் கோவிலில் 108 சங்காபிஷேக விழா
/
மாரியம்மன் கோவிலில் 108 சங்காபிஷேக விழா
ADDED : ஜன 13, 2025 02:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வெண்ணந்துார்: மார்கழி மாதம் நிறைவையொட்டி, வெண்ணந்துார், ஆர்.புதுப்பாளையம் மாரியம்மன் கோவிலில், மாரியம்மனுக்கு, 108 சங்காபிஷேகம் நடந்தது.
முன்னதாக சிறப்பு ஹோமம் நடந்தது. தொடர்ந்து பால், தயிர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட திரவியங்களால் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து, தீபாராதனை காட்டப்பட்டது. பின், யாகத்தில் வைக்கப்பட்ட புனித நீர் மற்றும் வலம்புரி சங்குகளில் வைக்கப்பட்ட ஏலக்காய், கிராம்பு, பச்சை கற்பூரம், ஜாதிபத்திரி, மிளகு, ஜாதிக்காய் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய புனித நீர் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.