sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

10ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியீடு நாமக்கல் மாவட்டத்தில் 104 பள்ளிகள் 'சதம்'

/

10ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியீடு நாமக்கல் மாவட்டத்தில் 104 பள்ளிகள் 'சதம்'

10ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியீடு நாமக்கல் மாவட்டத்தில் 104 பள்ளிகள் 'சதம்'

10ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியீடு நாமக்கல் மாவட்டத்தில் 104 பள்ளிகள் 'சதம்'


ADDED : மே 11, 2024 11:25 AM

Google News

ADDED : மே 11, 2024 11:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில், நாமக்கல் மாவட்டத்தில், 36 அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், 68 தனியார் பள்ளிகள் என, மொத்தம், 104 பள்ளிகள், 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளன.

தமிழகத்தில், பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு, கடந்த மார்ச், 26ல் துவங்கி, கடந்த, 8ல் முடிந்தது. நாமக்கல் மாவட்டத்தில், 296 பள்ளிகளை சேர்ந்த, 10,147 மாணவர்கள், 9,612 மாணவியர் என, மொத்தம், 19,759 பேர் தேர்வெழுதினர். அதை தொடர்ந்து, பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள், நேற்று வெளியிடப்பட்டன. அதில், நாமக்கல் மாவட்டத்தில், 36 அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், 68 தனியார் பள்ளிகள் உள்பட மொத்தம், 104 பள்ளிகள், 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.

அதன் விபரம் பின்வருமாறு: வரகூர், எர்ணாபுரம், காவக்காரப்பட்டி, பாண்டமங்கலம் மகளிர், கரிச்சிப்பாளையம் மற்றும் மாணிக்கம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளிகள், அலங்காநத்தம், ஏளூர், தளிகை, தொட்டிப்பட்டி, கீரம்பூர், ஆண்டாபுரம், சந்திரசேகரபுரம், பொன்னேரிப்பட்டி, பொட்டணம், தண்ணீர்பந்தல்காடு, சேளூர்நாடு, சின்னமுதலைப்பட்டி, பள்ளக்காபாளையம், இ.புதுப்பாளையம், ஓ.சவுதாபுரம், வில்லிபாளையம், பட்லுார், அருவங்காடு, செட்டியாம்பாளையம், நஞ்சப்பகவுண்டம்பாளையம், கொண்டரசம்பாளையம். மின்னக்கல், படவீடு, ஆனங்கூர், கே.கொளந்தபாளையம், பாம்பாளையம், கொமரமங்கலம், ஆதிதிராவிடர் நலப்பள்ளி, ஏ.பாலப்பட்டி மற்றும் வெண்ணந்துார் தில்லையாடி வள்ளியம்மை மகளிர் உயர்நிலைப்பள்ளி என, மொத்தம், 36 அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.

அதேபோல், ராசிபுரம் எஸ்.ஆர்.வி., மகளிர், ஆர்.பட்டணம் ஆனந்த வித்யாலயா மெட்ரிக், துத்திக்குளம் பிருந்தாவன் மெட்ரிக், போதுப்பட்டி கிரீன்பார்க் மெட்ரிக், கொல்லிமலை ஹில்டேல் மெட்ரிக், வளையப்பட்டி சைன்ஹில் அகாடமி மெட்ரிக், நாமகிரிப்பேட்டை கலைமகள் மெட்ரிக், நல்லிபாளையம் கொங்குநாடு மெட்ரிக், புதுச்சத்திரம் ஆர்.ஜி.ஆர்., மெட்ரிக்., கொமரிபாளையம் சரோஜினி மெட்ரிக். குருசாமிபாளையம் ஸ்ரீபாரதி வித்யா மந்திர் மெட்ரிக், புதன்சந்தை ஸ்ரீசக்தி மெட்ரிக், தொப்பப்பட்டி ஸ்ரீவாணி மெட்ரிக், ராசிபுரம் ஸ்ரீவாசவி வித்யாலயா மெட்ரிக், குருக்கபுரம் எஸ்.ஆர்.வி., எக்ஸல் மெட்ரிக், சேந்தமங்கலம் வேதலோக வித்யாலயா மெட்ரிக், ராசிபுரம் வித்யா நிகேதன் மெட்ரிக், காளப்பநாயக்கன்பட்டி பாரதி மெட்ரிக், மோகனுார் கலைமகள் மெட்ரிக், என்.காட்டூர் கே.பி.எம்., ஹைடெக் மெட்ரிக்.

எருமப்பட்டி ஆக்ஸ்போர்டு மெட்ரிக், நாமக்கல் செல்வம் மெட்ரிக், மோகனுார் எஸ்.சி.எஸ்.எம்., மெட்ரிக், ஆலம்பட்டி வெற்றி வித்யாலயா மெட்ரிக், சேந்தமங்கலம் விவேகா மெட்ரிக், புதுச்சத்திரம் விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக், என்.புதுப்பட்டி மாடர்ன் அகாடமி மெட்ரிக், குருக்கபுரம் ஸ்ரீவித்யா மந்திர் மெட்ரிக், குச்சிப்பாளையம் ஏ.எஸ்.எஸ்., மெட்ரிக், திருச்செங்கோடு ஹோலி ஏஞ்சல்ஸ் மெட்ரிக்.

என்.கந்தம்பாளையம் காந்தி மெட்ரிக், குமாரபாளையம் ஜே.கே.கே., நடராஜா மெட்ரிக், ப.வேலுார் கந்தசாமி கண்டர் மெட்ரிக், ப.வேலுார் கொங்கு மெட்ரிக், வேலகவுண்டம்பட்டி கொங்குநாடு மெட்ரிக், தோக்கவாடி கே.எஸ்.ஆர்., மெட்ரிக், பரமத்தி மலர் மெட்ரிக், ஜேடர்பாளையம் ஆர்.கே.வி., மெட்ரிக், எம்.கந்தம்பாளையம் எஸ்.கே.வி., மகளிர் மெட்ரிக், எலச்சிப்பாளையம் ஸ்ரீராமச்சந்திரா மெட்ரிக்.

மாதேசம்பாளையம் சிவபாக்கியம் முத்துசாமி மெட்ரிக், பள்ளிப்பாளையம் எஸ்.பி.பி., மெட்ரிக், நாச்சிப்பட்டி ஸ்ரீவித்யா மந்திர் மெட்ரிக், வையப்பமலை ஸ்ரீவிநாயகா மெட்ரிக், குமாரபாளையம் எஸ்.எஸ்.எம். லட்சுமி அம்மாள் மெட்ரிக், திருச்செங்கோடு அவ்வை கே.எஸ்.ஆர்., மெட்ரிக், பொத்தனுார் பிருந்தாவன் மெட்ரிக், ஆர்.புதுப்பாளையம் ஜே.வி.எம்., மெட்ரிக், முனியகவுண்டம்பாளையம் ஆர்.எஸ்.ஆக்ஸ்போர்டு மெட்ரிக், எம்.கந்தம்பாளையம் எஸ்.கே.வி., மெட்ரிக். மாரப்பம்பாளையம் ஸ்ரீஅம்மன் மெட்ரிக், வெள்ளதாரை ஸ்ரீராஜா விநாயகா மெட்ரிக், பீச்சப்பாளையம் வி.ஐ.பி., மெட்ரிக், பாண்டமங்கலம் விவேகானந்தா மெட்ரிக், திருச்செங்கோடு மேதா மெட்ரிக், திருச்செங்கோடு செவன்த்டே அட்வென்டிஸ்ட் மெட்ரிக், குமாரபாளையம் ஏ.வி.எஸ்., மெட்ரிக், பொத்தனுார் சாணக்கியா ஹைடெக் மெட்ரிக், குமாரபாளையம் விக்யான் விகாஷ் மெட்ரிக், குமாரபாளையம் ஏ.வி.எஸ்., மெட்ரிக்.

நாமக்கல் காவேட்டிப்பட்டி குறிஞ்சி மேல்நிலைப்பள்ளி, முத்துகாப்பட்டி எஸ்.ஆர்.டி., ஆண்கள், சின்னத்தம்பிபாளையம் நாளந்தா மேல்நிலைப்பள்ளி, பிள்ளாநத்தம் ஸ்ரீவிநாயகா மேல்நிலைப்பள்ளி, கீரனுார் வலசு வெற்றி விகாஸ் மகளிர் மேல்நிலைப்பள்ளி, பீச்சாம்பாளையம் வி.ஐ.பி., மேல்நிலைப்பள்ளி, வடகரையாத்துார் சன்ஸ்டார் மேல்நிலைப்பள்ளி என, 68 பள்ளிகள், 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.






      Dinamalar
      Follow us