/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி நிறைவு
/
10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி நிறைவு
ADDED : மே 01, 2025 01:43 AM
நாமக்கல்நாமக்கல் மாவட்டத்தில், 92 மையங்களில், பத்தாம் வகுப்பு தேர்வு நடந்தது. அதில், அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகள் என, 275 பள்ளிகளை சேர்ந்த, 19,038 மாணவ, மாணவியர் தேர்வு எழுதினர்.
இத்தேர்வு, கடந்த, 15ல் முடிந்தது. நாமக்கல் மாவட்டத்தில், பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு விடைத்தாள் மதிப்பீடு செய்வதற்கு,
நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, ராசிபுரம் அண்ணாசலை அரசு மேல்நிலைப்பள்ளி, திருச்செங்கோடு கே.எஸ்.ஆர்., மெட்ரிக் பள்ளி என, மூன்று மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. அங்கு, விடைத்தாள் திருத்தப்பட்டது.
மாவட்டத்தில் உள்ள, மூன்று விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு முகாம் அலுவலராக, அரசு உயர்நிலைப்பள்ளி மூத்த தலைமையாசிரியர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் உத்தரவுப்படி, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யும் பணி, கடந்த, 21ல், தொடங்கியது.
இதையொட்டி வெளி மாவட்டத்தில் இருந்து விடைத்தாள்கள் வரவழைக்கப்பட்டு, 940 பட்டதாரி ஆசிரியர்கள் மூலம் விடைத்தாள்கள் திருத்தப்பட்டு வந்தன. இந்நிலையில், விடைத்தாள் திருத்தும் பணி, நேற்று முன்தினம் முடிந்தது.

