/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மாவட்டத்தில் எழுத, படிக்க தெரியாதவர்கள் 11,141 பேர் சிறப்பு மையங்களில் பயிற்சி
/
மாவட்டத்தில் எழுத, படிக்க தெரியாதவர்கள் 11,141 பேர் சிறப்பு மையங்களில் பயிற்சி
மாவட்டத்தில் எழுத, படிக்க தெரியாதவர்கள் 11,141 பேர் சிறப்பு மையங்களில் பயிற்சி
மாவட்டத்தில் எழுத, படிக்க தெரியாதவர்கள் 11,141 பேர் சிறப்பு மையங்களில் பயிற்சி
ADDED : ஜன 15, 2025 01:02 AM
நாமக்கல், 'புதிய பாரத எழுத்தறிவு' திட்டத்தில் நடப்பாண்டில், இரண்டாம் கட்ட ஆய்வில் இதுவரை, 11,141 பேர் எழுத, படிக்க தெரியாதவர்கள் என கண்டறியப்பட்டு, அவர்களுக்காக மையங்கள் அமைத்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில், 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பை அடிப்படையாக கொண்டு, 15 வயதிற்கு மேற்பட்ட முற்றிலும் எழுத, படிக்க தெரியாதவர்களுக்கு, அடிப்படை எழுத்தறிவு, எண்ணறிவு கல்வியை வழங்கும் வகையில், 'புதிய பாரத எழுத்தறிவு திட்டம்' 2022-23 முதல், அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது-. பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககத்தின் மூலம், மாவட்டத்தில் உள்ள, 15 ஒன்றியங்களிலும், 'புதிய பாரத எழுத்தறிவு திட்டம்' செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாமக்கல் மாவட்டத்தில், 2022-23, 2023-24ல், 1,748 மையங்களில், 32,112 கற்போர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டு எழுத்தறிவு பெற்றுள்ளனர். நடப்பு, 2024-25ல், இத்திட்டத்தின் முதற்கட்டத்தில், 14,361 எழுத, படிக்க தெரியாதவர்கள் கண்டறியப்பட்டு, 926 எழுத்தறிவு மையங்களில் பயிற்சியளிக்கப்பட்டு
எழுத்தறிவு பெற்றுள்ளனர்.
நடப்பு ஆண்டில், இரண்டாம் கட்ட செயல்பாடு
களுக்கு, நாமக்கல் மாவட்டத்தில் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ் தனிக்கவனம் பெறும் சிறப்பு பகுதிகளில், 100 சதவீதம் எழுத்தறிவு பெற்ற மாவட்டமாக விரைவில் மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, கொல்லிமலை வட்டாரத்தில் உள்ள, 305 குடியிருப்பு பகுதிகளில் மறுக்கணக்
கெடுப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மகேஸ்வரி தலைமை வகித்தார்.
டி.இ.ஓ.,க்கள் மற்றும் உதவி திட்ட அலுவலர் ஆகியோர் மேற்பார்வையில், அனைத்து வட்டார கல்வி அலுவலர்கள், வட்டார வள மைய மேற்பார்வை
யாளர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள், கொல்லிமலை பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் உள்ளிட்டோர் அடங்கிய, 115 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்கள் மூலம், 1,842 எழுத படிக்க தெரியாதோர் மற்றும் 66 தன்னார்வலர்கள் கண்டறியப்பட்டு சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இரண்டாம் கட்டமாக, வெண்ணந்துார் ஒன்றியம் போதமலை கீழூர் பஞ்.,க்குட்பட்ட குடியிருப்பு பகுதியான கீழூரில், புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில், முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி தலைமையில், கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. இதில், எழுத, படிக்க தெரியாதோர், 13 பேர் கண்டறியப்பட்டு, சிறப்பு மையம் அப்பகுதியில் தொடங்கி வைக்கப்பட்டது.
உதவி திட்ட அலுவலர், பள்ளி துணை ஆய்வாளர், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், மாவட்ட ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் மற்றும் வட்டார ஆசிரியர் பயிற்றுநர்கள் உடன் கலந்து கொண்டனர். நடப்பாண்டில், இரண்டாம் கட்ட ஆய்வில், இதுவரை, 11,141 எழுத படிக்க தெரியாதவர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு மையங்கள் அமைத்து பயிற்சியளிக்கப்பட்டு வருகிறது.