/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணிகள் தேர்வு 8 மையங்களில் 1,179 தேர்வர்கள் 'ஆப்சென்ட்'
/
ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணிகள் தேர்வு 8 மையங்களில் 1,179 தேர்வர்கள் 'ஆப்சென்ட்'
ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணிகள் தேர்வு 8 மையங்களில் 1,179 தேர்வர்கள் 'ஆப்சென்ட்'
ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணிகள் தேர்வு 8 மையங்களில் 1,179 தேர்வர்கள் 'ஆப்சென்ட்'
ADDED : அக் 27, 2024 01:17 AM
நாமக்கல், அக். 27-
ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணிகளுக்கான தேர்வில், 1,125 பேர் பங்கேற்றனர். 1,179 தேர்வர்கள் கலந்துகொள்ளவில்லை.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம், ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணிகள் (நேர்முக தேர்வு அல்லாத பணிகள்) போட்டித்தேர்வு தமிழகம் முழுவதும், நேற்று நடந்தது. நாமக்கல் மாவட்டத்தில், எட்டு தேர்வு மையங்களில் இத்தேர்வு நடந்தது. இதற்காக, காலை, 9:30 முதல், மதியம், 12:45 மணி வரை, 'ஓ.எம்.ஆர்.,' மூலம் மொத்தம், 2,304 பேர், மதியம், 2:30 முதல், மாலை, 5:30 மணி வரை, 'டிஸ்கிரிப்டிவ்' முறையில், 6 தேர்வர்கள் என மொத்தம், 2,310 பேர் விண்ணப்பித்திருந்தனர்.
தேர்வை கண்காணிக்க, 8 முதன்மை கண்காணிப்பாளர்கள், ஒரு பறக்கும் படை, இரண்டு நடமாடும் குழுக்கள், 8 ஆய்வு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டிருந்தனர். மேலும், கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளி நபர்கள் தேர்வு எழுத ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். நாமக்கல் கோட்டை நகரவை உயர்நிலைப்பள்ளி மற்றும் டிரினிட்டி மகளிர் கலை அறிவியல் கல்லுாரி ஆகிய மையங்களில் நடந்த ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணிகளுக்கான போட்டித்தேர்வு மையத்தில், கலெக்டர் உமா பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், தேர்வு மையங்களில் கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளி தேர்வு எழுத ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
நாமக்கல் மாவட்டத்தில் நடந்த ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணிகள் போட்டித்தேர்வில், 1,125 பேர் பங்கேற்றனர். 1,179 தேர்வர்கள் கலந்துகொள்ளவில்லை.