/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
12 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
/
12 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
ADDED : ஜூலை 16, 2025 01:32 AM
நாமகிரிப்பேட்டை, நாமகிரிப்பேட்டை யூனியன், பிலிப்பாகுட்டை பகுதியில் உள்ள டீ கடை, பெட்டிக்கடை, மளிகை கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களான ஹான்ஸ், குட்கா, பான்பராக், கூல் லிப் போன்றவை விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு துறையினருக்கு தகவல் வந்தது.
இதையடுத்து, நாமகிரிப்பேட்டை வட்டார உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் ராஜா, ராசிபுரம் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் கோகுல், புதுச்சத்திரம் வட்டார அலுவலர் ரமேஷ், மோகனுார் வட்டார அலுவலர் மணிமாறன் உள்ளிட்டோர் பிலிப்பாக்குட்டை பகுதியில் நேற்று திடீர் சோதனை நடத்தினர்.
சோதனையில், அப்பகுதியில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட, 10,000 ரூபாய் மதிப்புள்ள, 12 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்ததுடன் விற்பனை கடைகளுக்கு, 'சீல்' வைத்தனர்.