/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கஞ்சா, போதை மாத்திரை விற்ற 12 பேருக்கு 'காப்பு'
/
கஞ்சா, போதை மாத்திரை விற்ற 12 பேருக்கு 'காப்பு'
ADDED : மார் 31, 2025 03:09 AM
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம், வெப்படை பகுதியில் கஞ்சா, போதை மாத்-திரை விற்பனை நடப்பதாக, எஸ்.பி., ராஜேஸ்கண்ணனுக்கு புகார்கள் சென்றன.
இதையடுத்து, திருச்செங்கோடு டி.எஸ்.பி., கிருஷ்ணன் தலைமையில், பள்ளிப்பாளையம் இன்ஸ்-பெக்டர்(பொ) தீபா மற்றும் 10க்கும் மேற்பட்ட போலீசார், நேற்று அதிகாலை, 4:00 முதல் மாலை, 2:00 மணி வரை சோத-னையில் ஈடுபட்னர். இதில், காவிரி, ஆவாரங்காடு, சந்தைப்-பேட்டை உள்ளிட்ட இடங்களில் கஞ்சா விற்பனை செய்த சுஜீத், 27, லட்சுமண்ணன், 21, மணிகண்டன், 26, சின்ராஜ், 23, தினேஷ்குமார், 22, வினோத்குமார், 30, மணி, 21, கவுதம், 21, தனபால், 21, ஆகிய, 9 பேரை கைது செய்தனர்.அதேபோல் வெப்படை பகுதியில் கஞ்சா விற்பனை செய்த அஜய், 23 மற்றும் 17 வயது சிறுவன். போதை மாத்தரை விற்ற கிரிதரன், 27, தீபன், 23, கவுதம், 23, புகையிலை விற்ற சம்பத், 63, ரவிகுமார், 41, சதீஸ்குமார், 34, ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.