/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
'நீட்' சென்டர் விடுதியில் தங்கி படித்த 12 மாணவர்களுக்கு உடல்நிலை பாதிப்பு
/
'நீட்' சென்டர் விடுதியில் தங்கி படித்த 12 மாணவர்களுக்கு உடல்நிலை பாதிப்பு
'நீட்' சென்டர் விடுதியில் தங்கி படித்த 12 மாணவர்களுக்கு உடல்நிலை பாதிப்பு
'நீட்' சென்டர் விடுதியில் தங்கி படித்த 12 மாணவர்களுக்கு உடல்நிலை பாதிப்பு
ADDED : டிச 20, 2025 06:57 AM
நாமக்கல்: தனியார், 'நீட்' சென்டர் விடுதியில் தங்கி படித்த, 12 மாணவர்க-ளுக்கு உடல்நிலை பாதிப்பால், மருத்துவமனையில் அனுமதிக்-கப்பட்டனர். சோதனையில், காலாவதியான டால்டா, சமையல் எண்ணெய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
நாமக்கல் அடுத்த எர்ணாபுரத்தில், தனியார், 'நீட்' சென்டர் செயல்பட்டு வருகிறது. இங்கு, 350க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். இதில், 12 மாணவர்கள், கடந்த, 17ல், விடுதியில் மதிய உணவு சாப்பிட்டுள்-ளனர். அப்போது அவர்களுக்கு திடீரென ஒவ்வாமை ஏற்பட்டு, உடல்நிலை மோசமானது. அவர்களை மீட்டு, நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
தகவலறிந்த நாமக்கல் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நிய-மன அலுவலர் தங்க விக்னேஷ் தலைமையிலான குழுவினர், சம்-பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில் ஆய்வு செய்தனர். அப்போது, காலாவதியான டால்டா, சமையல் எண்ணெய் என, 12 லிட்டர், கெட்டுப்போன, 10 லிட்டர் பால் இருப்பு வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து, கல்வி நிறுவனத்திற்கு, விளக்கம் கேட்டு உணவு பாதுகாப்புத்துறை மூலம் நோட்டீஸ் வழங்கினர். 40 நாட்களுக்கு முன், இந்த கல்வி நிறுவனத்திற்கு, சுயதள பரிசோதனை படிவம் வழங்கி, அவற்றை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும் என அறி-வுறுத்தப்பட்டது.
ஆனால், இதுவரை, படிவத்தை பூர்த்தி செய்து வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

