/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
1,200 டன் கம்பு, 1,000 டன் நெல் சரக்கு ரயிலில் வரத்து
/
1,200 டன் கம்பு, 1,000 டன் நெல் சரக்கு ரயிலில் வரத்து
1,200 டன் கம்பு, 1,000 டன் நெல் சரக்கு ரயிலில் வரத்து
1,200 டன் கம்பு, 1,000 டன் நெல் சரக்கு ரயிலில் வரத்து
ADDED : ஜூலை 07, 2024 07:11 AM
நாமக்கல், : நாமக்கல் - சேலம் ரயில் போக்குவரத்து துவங்கியது முதல், சரக்கு ரயிலில் கோழி தீவனமான சோயா, மக்காச்சோளம், புண்-ணாக்கு, தவுடு, ரேஷன் தாரர்களுக்கு தேவையான அரிசி, கோதுமை, நாட்டு சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை சரக்கு ரயில் மூலம், நாமக்கல் மாவட்டத்துக்கு தருவிக்கப்படுகிறது. அவை, சம்பந்தப்பட்ட கோழிப்பண்ணைகளுக்கும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப சேமிப்பு கிடங்கிலும் சேமித்து வைக்கப்ப-டுகிறது.
இந்த கோழித்தீவனம், அத்தியாவசிய பொருட்கள் கர்நா-டகா, ஆந்திரா, தெலுங்கானா, சட்டீஸ்கர், ராஜஸ்தான், பீஹார், குஜராத் போன்ற மாநிலங்களில் இருந்து வரவழைக்கப்படுகிறது.அதன்படி, நேற்று ஆந்திரா மாநிலத்தில் இருந்து, 1,200 டன் கம்பு, 21 வேகனில், நாமக்கல் ரயில் நிலையத்துக்கு வரவழைக்-கப்பட்டது. அவற்றை, 45 லாரிகள் ஏற்றி சென்று, கோழிப்பண்-ணைகளில் இருப்பை வைக்கப்பட்டது. அதேபோல், தஞ்சை மாவட்டத்தில் இருந்து, 1,000 டன் நெல், 21 வேகனில், நாமக்கல் ரயில் நிலையத்துக்கு வரவழைக்கப்பட்டது. அவற்றை, கபிலர்மலையில் உள்ள அரவை ஆலைக்கு, 45 லாரிகளில் ஏற்றி செல்லப்பட்டது.