/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
1,250 டன் ரேஷன் அரிசி நாமக்கல்லுக்கு வரவழைப்பு
/
1,250 டன் ரேஷன் அரிசி நாமக்கல்லுக்கு வரவழைப்பு
ADDED : மார் 29, 2024 01:18 AM
நாமக்கல்:நாமக்கல் ரேஷன் கடைகளுக்கு தேவையான, 1,250 டன் அரிசியை திருவாரூரில் இருந்து, சரக்கு ரயில் மூலம் வரவழைக்கப்பட்டது.
நாமக்கல்
மாவட்டத்தில் செயல்படும் ரேஷன் கடைகளுக்கு தேவையான அரிசி, ஆந்திரா,
தெலுங்கானா, தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து
கொண்டுவரப்படும். அந்த வகையில், நேற்று திருவாரூரில் இருந்து, 21
வேகன்கள் கொண்ட சரக்கு ரயில் மூலம், 1,250 டன் ரேஷன் அரிசியை நாமக்கல்
ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்தடைந்தது. பின், அங்கிருந்து, 47 லாரிகளில்
ஏற்றி தமிழ்நாடு உணவுப்பொருள் பாதுகாப்பு கிடங்கிற்கு கொண்டு
செல்லப்பட்டது.
அதேபோல், தஞ்சவூரில் இருந்து, 21 வேகன்கள் கொண்ட
சரக்கு ரயிலில், 1,000 டன் அளவில் நெல் மூட்டைகளை நாமக்கல் ரயில்வே
ஸ்டேஷனுக்கு வரவழைக்கப்பட்டு அங்கிருந்து, 42 லாரிகளில் ஏற்றி,
ப.வேலுாரில் செயல்படும் அரவை ஆலைக்கு கொண்டு செல்லப்பட்டன.

