ADDED : மார் 22, 2026 06:34 AM
அ நிறம் | அளவு
பள்ளிப்பாளையம்:தமிழகத்தில்
சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், தேர்தல் நடத்தை விதிகள்
அமலுக்கு வந்துள்ளன. இதையடுத்து, உரிமம் பெற்று துப்பாக்கி
வைத்துள்ளவர்கள், உடனடியாக சம்-பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷன்களில்
ஒப்படைக்க வேண்டும் என, போலீசார் அறிவித்துள்ளனர்.
அதன்படி,
பள்ளிப்பாளையம் சப்-டிவிஷனுக்குட்பட்ட பள்ளிப்-பாளையம்,
குமாரபாளையம், வெப்படை, கொக்கராயன்-பேட்டை, மொளசி ஆகிய, ஐந்து
போலீஸ் ஸ்டேஷன் எல்-லைக்கு உட்பட்ட, 128 உரிமம் பெற்ற துப்பாக்கிகள்
ஒப்ப-டைக்கப்பட்டுள்ளன.
போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைக்கப்பட்ட
இந்த துப்பாக்கி-களை, ஓட்டுப்பதிவு முடிந்த பின்
சம்பந்தப்பட்டவருக்கு மீண்டும் வழங்கப்படும்.
