/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ம.பி.,யில் இருந்து நாமக்கல்லுக்கு 1,300 டன் கடுகு புண்ணாக்கு வரத்து

ADDED : செப் 26, 2024 02:18 AM
நாமக்கல்: நாமக்கல் மாவட்ட கோழிப்பண்ணைகளில் பயன்படுத்தும் தீவ-னத்திற்கு தேவையான மக்காச்சோளம், கடுகு புண்ணாக்கு, சோயா உள்ளிட்ட மூலப்பொருட்களும், ரேஷன் கடைகளுக்கு தேவையான கோதுமை, அரிசி, சக்கரை உள்ளிட்ட உணவு பொருட்களும், வடமாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படுகி-றது.
அதன்படி, நேற்று, 1,300 டன் கடுகு புண்ணாக்கு, மத்தியபிரதேச மாநிலம், குவாலியரில் இருந்து, 21 வேகன்கள் கொண்ட சரக்கு ரயில் மூலம் நாமக்கல் ரயில்வே ஸ்டேஷனுக்கு வரவழைக்கப்-பட்டு, லாரிகளில் ஏற்றி அரவை ஆலை குடோன்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.இதேபோல், ரேஷன் கடைகளுக்கு தேவையான, 2,600 டன் அரிசி, தெலுங்கானா மாநிலத்தில் இருந்து, 42 வேகன்கள் கொண்ட சரக்கு ரயில் மூலம் நாமக்கல் ரயில்வே ஸ்டேஷனுக்கு
வரவழைக்கப்பட்டு, நல்லிபாளையத்தில் உள்ள தமிழ்நாடு உண-வுப்பொருள் பாதுகாப்பு கிடங்கிற்கு, லாரிகள் மூலம் கொண்டு செல்லப்பட்டன.