/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஞானமணி கல்லுாரியில்14வது பட்டமளிப்பு விழா
/
ஞானமணி கல்லுாரியில்14வது பட்டமளிப்பு விழா
ADDED : ஏப் 17, 2025 02:11 AM
ராசிபுரம்:ராசிபுரம் ஞானமணி கல்வி நிறுவனங்களில், 14வது பட்டமளிப்பு விழா நடந்தது. தலைவர் அரங்கண்ணல், விழாவை துவக்கி வைத்தார். முதல்வர் கண்ணன், டீன் ஆரோக்கியசாமி ஆகியோர், விழா அறிக்கையை சமர்ப்பித்தனர். தாளாளர் மாலாலீனா, துணை தாளாளர் மதுவந்தினி அரங்கண்ணல், முதன்மை நிர்வாக அதிகாரி பிரேம்குமார், கல்வி இயக்குனர் சஞ்செய் காந்தி உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினர்.
சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி சேஷ்சாயி, மாணவர்களுக்கு பட்டம் வழங்கி பேசுகையில், ''மதிப்பெண் மட்டுமே, ஒருவரின் திறனை வெளிப்படுத்த உதவாது. அறிவார்ந்த விஷயங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும். எதிர்காலத்தை கண்டு பயப்படாமல், தெளிவான முடிவுகளை எடுக்க வேண்டும்.
தாய், தந்தை கூறும் அறிவுரைகளை எட்டிக்காயாக நினைக்கும் இளைஞர்கள், வாழ்வில் வெற்றி பெற இயலாது. எந்த கவன சிதறலுமின்றி, நாடு, வீடு, சமூகம், தன்னுடைய சுய முன்னேற்றத்திற்காக முடிந்த செயல்களை செய்ய வேண்டும்,'' என்றார்.பல்வேறு துறைகளை சேர்ந்த, 750 மாணவ, மாணவியர் பட்டம் பெற்றனர். இதில், 103 பேர் முதுகலை பட்டமும், 647 பேர் இளநிலை
பட்டமும் பெற்றனர்.