/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
15 பவுன் திருட்டு எதிரொலி சந்தேக நபரிடம் விசாரணை
/
15 பவுன் திருட்டு எதிரொலி சந்தேக நபரிடம் விசாரணை
ADDED : மே 12, 2025 03:48 AM
குமாரபாளையம்: குமாரபாளையம் கலைமகள் வீதியை சேர்ந்தவர் ராஜேந்திரன், 65; பார்மசி நடத்தி வருகிறார். கடந்த, 8ல் குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தார். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள், வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் வைத்திருந்த, 15 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றனர்.
இந்த சம்பவம் எதிரொலியாக, போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், பள்ளிப்பாளையம் பிரிவு பகுதியில் சந்தேகப்படும்படி சென்று கொண்டிருந்த குமாரபாளையம் டூவீலர் மெக்கானிக்குகள் சக்திவேல், 28, தேவராஜ், 27, கட்டட தொழிலாளிகள் சரவணன், 29, கேசவன், 30, தனியார் நிறுவன தொழிலாளி திருப்பூர் பிரகாஷ், 30, ஆகியோரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
குமாரபாளையம் போலீஸ் ஸ்டேஷன் எல்லைப்பகுதி முழுவதும் போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டு வருகின்றனர்.